பெருந்தலைவர்  பிறந்தநாள்
அமைப்புகள்

சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா

S.A.சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் அய்யா கு.காமராசர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா 29.07.2019 அன்று கீழமண்குண்டு கிராமத்தில் கொண்டாடப்பட்டது.

அய்யா கு.காமராசர் அவர்களின் சிலைக்கு அண்ணா திராவிடர் கழக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் குபேரன் தாஸ், மண்டபம் ஒன்றிய திமுக இளைஞரணி RT கார்த்திகேயன், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஜி சேதுபதி, காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில், அண்ணன் S.A. சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை நண்பர்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக் வழங்கி பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர். […]

மன்னர் தவசி நாடார்  குரு பூஜை
சத்ரிய நாடார் சங்கம்

மன்னர் தவசி நாடார் குரு பூஜை வீரவணக்க விழா !

அகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் வெள்ளரிஓடை கிராமத்தில், மன்னர் தவசி நாடார் அரண்மனை வளாகம் அருகில், இப்பகுதியில் ஆட்சி புரிந்த மன்னர் தவசி நாடனின் மறைக்கப்பட்ட வரலாற்று பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக 03.06.2019 அன்று இரண்டாவது ஆண்டு "குரு பூஜை வீரவணக்க விழா" சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் இப்பகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், உறவின்முறை நிர்வாகிகள், மற்றும் அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாநில, மாவட்ட, நிர்வாகிகள், மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். […]

சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள்
நாடார் மக்கள் சக்தி

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி இல்ல திருமண விழா!

சென்னையில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பேத்தி மயூரி இல்ல திருமண விழாவில் நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு ஹரி நாடார் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் சென்னை நாடார் விஜயகுமார், நாடார் ஒற்றுமை இயக்கம் விக்னேஷ் கார்த்திக் மற்றும் சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். […]

அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்..
உலகம்

அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்..

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது. இதனால் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆக்லஹாமாவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. சூறாவளி, மழை மற்றும் வெள்ளம் காரணமாக மத்திய அமெரிக்க மாகாணங்களில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. […]

சூறாவளித் தாக்குதல்
உலகம்

அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்..

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது.

இதனால் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆக்லஹாமாவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

சூறாவளி, மழை மற்றும் வெள்ளம் காரணமாக மத்திய அமெரிக்க மாகாணங்களில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. […]

சீனா
உலகம்

சீனாவில் நடந்த குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி.

சீனாவில் நடந்த குழந்தைகளுக்கான சைக்கிள் ரேஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சீனாவின் சொங்கியிங்((Chongqing)) பகுதியில் குழந்தைகளுக்கான சைக்கிள் ரேஸ் நடைபெற்றது.

இதில் பெடல் இல்லாத கால்களால் தரையில் தட்டி ஓட்டும் சின்ன சைக்கிள்களில் 10க்கும் மேற்பட்ட 6 வயது வரையிலான குழந்தைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஹெல்மெட் போன்ற பாதுகாப்புகளுடன் இந்த போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளை பெற்றோர் உடன் இருந்து உற்சாகப்படுத்தினர்.

இந்த போட்டி கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாகவும், குழந்தைகளின் உடல் தகுதியையும், உடல் ஒத்துழைப்பையும் அதிகரிக்க இந்த விளையாட்டு உதவுகிறது என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். […]