அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்..

அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்..

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது. இதனால் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆக்லஹாமாவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. சூறாவளி, மழை மற்றும் வெள்ளம் காரணமாக மத்திய அமெரிக்க மாகாணங்களில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன.