அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்

அங்கன்வாடி

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2 ஆயிரத்து 381 ஆசிரியர்களை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை, அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு நியமித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மேலும் அரசுப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளுக்கு நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதனடிப்படையில் ஏற்கனவே முதன்மைக்கல்வி அலுவலர்களால் அங்கன்வாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட 2 ஆயிரத்து 381 இடைநிலை ஆசிரியர்களும், மழலையர் வகுப்புகள் தொடங்கும் நாளில் பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும் என்றும், அதில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.