பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன் இல்ல விழா
செய்திகள்

அகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா

அகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன்-சரோஜினி அவர்களது செல்வ மகள் இரா.துவாரகாவின் காதணி விழா இராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.  அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாநில பொதுச்செயலாளர் திரு.பா.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் செ.தாமோதிரன் வரவேற்புரையாற்றினார்,
மாநில செயலாளர் திரு.கு.நாகராஜன், அமீரக கிளை தலைவர் திரு.அருள்வீர கேசவன், ஓமன் கிளை மூத்த உறுப்பினர் திரு.இராமகிருஷ்ணன், இரட்டையூரணி நாடார் உறவின்முறை தலைவர் திரு.முருகேசன், சென்னைவாழ் இராமநாதபுரம் நாடார் சங்க செயலாளர் திரு.விமலசண்முகவேல், பொருளாளர் திரு.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சிறப்பு விருந்தினர்களாக நாடார் மஹாஜன சங்க இணைச்செயலாளர் திரு.த.மோகன்,
அகில இந்திய சத்ரிய நாடார் சங்க நிறுவனத்தலைவர் இராச.வீரமணி கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் செ.பிரபாகரன், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கு.பத்மநாபன், வே.அசோக், இளங்கோவன், லிங்கநாதன், ஜெயப்பிரகாஷ், கோபிராஜா, உதயமூர்த்தி, திரு சுப்பிரமணியன் மற்றும் திருமதி மணிமேகலை செல்வம், திருமதி.தாரணி மகேந்திரன், திருமதி.கோகிலா தமிழ்க்குமரன், திருமதி.தீபா நந்தபாபு,  திருமதி ஞானசௌந்தரி செம்புக்குட்டி, உள்ளிட்ட அகில இந்திய சத்ரிய நாடார் சங்கம், கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை , உறவின்முறைகள்,மகளிர் மன்றங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாவட்ட பொருளாளர் திரு.ஆனந்தபாபு நன்றியுரையாற்றினார்

[…]

இந்தியா
இந்தியா

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி அடையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2019-20 நிதியாண்டில் (2019 ஏப்ரல் 1ம் தேதி முதல், 2020 மார்ச் 31 வரை) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக உயரும் என மதிப்பிட்டுள்ளது. அதன்பிறகும் வளர்ச்சி நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.“வலுவான முதலீடு மற்றும் தனியார் நுகர்வு உள்ளிட்ட காரணங்களால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். மேலும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா தக்கவைத்துக் கொள்ளும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-ல் 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்த ஆண்டு 6.2 சதவீதமாக குறையும். அதன்பின்னர் 2020-ல் 6.1 சதவீதமாகவும், 2021-ல் 6 சதவீதமாகவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. […]

திருமண சீர்வரிசை திட்டம்
சங்கம்

நாடார் மகளிர்மன்றம் சார்பாக திருமண சீர்வரிசை திட்டம்..

நாடார் மஹாஜன சங்கம், நாடார் மகளிர்மன்றம் சார்பாக திருமண சீர்வரிசை திட்டத்தின் கீழ் கல்யாணசுந்தரபுரம் பகுதிகளில் நலிவற்ற நமது சமுதாய தம்பதியர் திருமதி.விஜயலட்சுமி - திரு.ரகுபதி அவர்களுக்கு 31.03.2019 அன்று நமது நாடார் மஹாஜன சங்கப்பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் நேரில் சென்று சீர்ப்பொருள்களை வழங்கினார்கள். […]

தமிழக அரசு பள்ளி
செய்திகள்

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை அறிமுகம்

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம் பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சந்தன நிற கால் சட்டையும் சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவியருக்கு கூடுதலக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு ஏற்கனவே சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. […]

தண்ணீர் வறட்சி
செய்திகள்

தண்ணீர் வறட்சியின் கோர முகம்...

தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது முதல்முறையல்ல பல தடவை தன்னுடைய தண்ணீர் பஞ்சமானது தன் முகத்தை வறட்சியாக காட்டி இருக்கிறது அதுவும் கோடைகாலமாக இருக்கும் இப்போது தனது முகத்தை உக்கிரமாக காட்டுகிறது தண்ணீர் பஞ்சம்.
வெயிலோடு சேர்த்து வறட்சியும் மக்களை வாட்டி எடுக்கிறது. அடிக்கும் அக்னி வெயிலுக்கு தண்ணீர் தேடி அலைகின்றனர் மக்கள். ஆனால் எவ்வளவு அலைந்தாலும் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதிலும் மெட்ரோ சிட்டிகளான சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் நிலையை சொல்ல வேண்டியதில்லை. மக்கள் காலிக்குடங்களோடு தண்ணீர் வேட்டையை நடத்துகின்றன ஒரு சில மணி நேரமல்ல ஒரு நாள் முழுவதும். சில இடங்களில் லாரி தண்ணீர் ஒரு குடம் கூட கிடைக்கவில்லை என போராட்டம் வெடிக்கிறது. மாதம் மாதம் காய்கறிக்கு,மருந்துக்கு,பெட்ரோலுக்கு காசை ஒதுக்குவது போல தண்ணீருக்கும் மாதம் காசை ஒதுக்கி வைத்து வாங்கிவிடலாம் என முடிவெடுத்துவிட்டோம். அதன் விளைவுதான் பெரு நகரங்களில் மாதம் 5000-லிருந்து 7000-வரை தண்ணீர் வாங்க ஒவ்வொரு குடும்பங்களில் பட்ஜெட்டானது மாத மாதம் ஒதுக்கப்படுகிறது. காசு நம்மிடம் இருக்கிறது தண்ணீர் வாங்க முன்வந்துவிட்டோம் . ஆனால் நிலத்திடம் இருந்தால் தானே நமக்கு தண்ணீர் என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பினால் அதற்கு நம்மிடம் பதில் இருக்குமா என தெரியவில்லை. நிலத்தடி நீர் மட்டத்தை பற்றியே மறந்துவிட்டோம் பின் எப்படி நம்முடைய நிலத்தடி நீரைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். பருவ மழையும் பொய்துவிட்டது அதுதான் வறட்சிக்கு காரணம் என்ன நாம் தேர்தெடுத்த அரசியல் வாதிகள் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறார்கள். ஆமாம் பருவ மழை பொய்துதான் விட்டது ஆனால் மழை பெய்யும் போது அதிகமாக பெய்த மழையை அணைகளிலும், ஆறுகளிலும்,குளங்களிலும், கண்மாய்களிலும் ஏன் சேமிக்கவில்லை. காரணம் முறையாக தூர்வாரவில்லை தூர்வார ஒதுக்கிய பணத்தை இவர்கள் தூர்வாரிவிட்டார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட ஒரு சந்திப்பில், “தமிழகத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சரியான நேரத்திற்கு பெய்யாமல் போனதுதான் இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம். ஆனாலும் கோடை காலத்தில் தமிழக மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படகூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இதை சரிசெய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் வறட்சியாக இருக்கும் இடங்களிலும் தண்ணீரானது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுப்போக தேர்தலுக்கு முன்பே குடிநீர் தேவைகான நிதிகளை ஒதுக்கிவிட்டிருப்பதால் தண்ணீர் பிரச்சனைப் பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை” என சொல்கிறார் முதல்வர்.முதல்வர் பழனிசாமி சொல்வது போல வறட்சியை தடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை இந்த துரித பணிகள் முடிவதற்குள் கோடைகாலம் முடிந்திருக்கலாம். ஆகவே அரசாங்கத்தை நம்பாமல் இனிவரும் காலங்களில் ‘ஒவ்வொரு அரிசியில் நம் பெயர் இருப்பதை ஒரு துளி நீரிலும் நம் பெயர்கள் இருப்பதாக நினைத்து’ நிலத்தடி நீரை பெருக்குவோம் தண்ணீர் வறட்சியை விரட்ட சிக்கனத்தை கையாள்வோம். […]

உழவாரப்பணி துவக்கவிழா
pothu seyithigal

தன்னார்வலர்களின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலை இரண்டாம் ஆண்டு உழவாரப்பணி துவக்கவிழா

12-05-2019 ஞாயிறு அன்று மதுரை கம்மவர் நாயுடு மகாஜன சங்கம் மீட்டிங் ஹாலில், பாரத பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பாக இரண்டாம் ஆண்டு உழவாரப்பணி துவக்கவிழா நடைபெற்றது. இவ் விழாவில் விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு தேவையான திட்டங்கள் முன்வைக்கப்பட்டது. இன்னும் சில தலைவர்களின் சிலைகளை பராமரிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் பணிகள் மென்மேலும் வளர்ச்சியுறும் பொருட்டு,இவ்விழாவிற்கு வருகை புரிந்த உணர்வாளர்கள் தேவையான ஆதரவினை தர முன்வந்துள்ளனர். மேலும் பெருந்தலைவர் சிலைக்கு வருகைபுரிந்து மாலை அணிவித்து வணங்கிய இளம் சிறார்களுக்கு சிறு பரிசுகள் வழங்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து காமராஜர் சிலையை பராமரிப்பவர்கள் இவ் விழாவிற்காக வருகை புரிந்து சிறப்பித்தார்கள். இவ்விழாவில் ஜனதா தள கட்சியின் பொதுச்செயலாளர் ஜான் மோசஸ், காமராஜர் யுவ கேந்திரா மாநில செயலாளர் நெல்லை ரவி குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர் மட்ட குழு - விஜய் மாரீஸ், தன்னார்வலர் மனோகர பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் மாலின் உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி நாடார், ஆசைத்தம்பி, அசோக் குமார், விருதை வெற்றி, சிவலிங்கம், கார்த்திகேயன் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர். […]

வைரல் வீடியோ
pothu seithigal

பனங்காட்டு மக்கள் கழகம் கட்சி தலைவர் சுபாஸ் பண்ணையாரின் வைரல் வீடியோ.

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரைப்பட்டியிலுள்ள கோவில் திருவிழாவில் சிறுவர்களுடன் நடனம் ஆடும் பனங்காட்டு மக்கள் கழகம் கட்சி தலைவர் சுபாஸ் பண்ணையாரின் வைரல் வீடியோ. […]