அகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா

பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன் இல்ல விழா
பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன் இல்ல விழா

அகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன்-சரோஜினி அவர்களது செல்வ மகள் இரா.துவாரகாவின் காதணி விழா இராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.  அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாநில பொதுச்செயலாளர் திரு.பா.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் செ.தாமோதிரன் வரவேற்புரையாற்றினார்,
மாநில செயலாளர் திரு.கு.நாகராஜன், அமீரக கிளை தலைவர் திரு.அருள்வீர கேசவன், ஓமன் கிளை மூத்த உறுப்பினர் திரு.இராமகிருஷ்ணன், இரட்டையூரணி நாடார் உறவின்முறை தலைவர் திரு.முருகேசன், சென்னைவாழ் இராமநாதபுரம் நாடார் சங்க செயலாளர் திரு.விமலசண்முகவேல், பொருளாளர் திரு.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
சிறப்பு விருந்தினர்களாக நாடார் மஹாஜன சங்க இணைச்செயலாளர் திரு.த.மோகன்,
அகில இந்திய சத்ரிய நாடார் சங்க நிறுவனத்தலைவர் இராச.வீரமணி கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் செ.பிரபாகரன், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கு.பத்மநாபன், வே.அசோக், இளங்கோவன், லிங்கநாதன், ஜெயப்பிரகாஷ், கோபிராஜா, உதயமூர்த்தி, திரு சுப்பிரமணியன் மற்றும் திருமதி மணிமேகலை செல்வம், திருமதி.தாரணி மகேந்திரன், திருமதி.கோகிலா தமிழ்க்குமரன், திருமதி.தீபா நந்தபாபு,  திருமதி ஞானசௌந்தரி செம்புக்குட்டி, உள்ளிட்ட அகில இந்திய சத்ரிய நாடார் சங்கம், கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை , உறவின்முறைகள்,மகளிர் மன்றங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாவட்ட பொருளாளர் திரு.ஆனந்தபாபு நன்றியுரையாற்றினார்