தன்னார்வலர்களின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலை இரண்டாம் ஆண்டு உழவாரப்பணி துவக்கவிழா

உழவாரப்பணி துவக்கவிழா

12-05-2019 ஞாயிறு அன்று மதுரை கம்மவர் நாயுடு மகாஜன சங்கம் மீட்டிங் ஹாலில், பாரத பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பாக இரண்டாம் ஆண்டு உழவாரப்பணி துவக்கவிழா நடைபெற்றது. இவ் விழாவில் விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு தேவையான திட்டங்கள் முன்வைக்கப்பட்டது. இன்னும் சில தலைவர்களின் சிலைகளை பராமரிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் பணிகள் மென்மேலும் வளர்ச்சியுறும் பொருட்டு,இவ்விழாவிற்கு வருகை புரிந்த உணர்வாளர்கள் தேவையான ஆதரவினை தர முன்வந்துள்ளனர். மேலும் பெருந்தலைவர் சிலைக்கு வருகைபுரிந்து மாலை அணிவித்து வணங்கிய இளம் சிறார்களுக்கு சிறு பரிசுகள் வழங்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து காமராஜர் சிலையை பராமரிப்பவர்கள் இவ் விழாவிற்காக வருகை புரிந்து சிறப்பித்தார்கள். இவ்விழாவில் ஜனதா தள கட்சியின் பொதுச்செயலாளர் ஜான் மோசஸ், காமராஜர் யுவ கேந்திரா மாநில செயலாளர் நெல்லை ரவி குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர் மட்ட குழு - விஜய் மாரீஸ், தன்னார்வலர் மனோகர பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் மாலின் உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி நாடார், ஆசைத்தம்பி, அசோக் குமார், விருதை வெற்றி, சிவலிங்கம், கார்த்திகேயன் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.