• காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்!
 • அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..
 • சுபாஷ் பண்ணையார் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்டம் நண்பர்கள் சார்பாக, பெருந்தலைவர் பிறந்தநாள் விழா
 • நாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா
 • அகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா
 • பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

சங்கம்

 • காமராஜ் யுவகேந்திரா
  28.05.2019 இராமநாதபுரம் G.S.மஹாலில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. சமுதாய இளைஞர்களை சிந்தனையுள்ளவர்களாக உருவாக்கவும்,கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வர்த்தகம், மருத்துவம் மற்றும் அரசியல் துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாகவும், ஆளுமைத்திறன் உள்ளவர்களாகவும் உருவாக்கபட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காமராஜ் யுவகேந்திரா வின் அறிமுக விழா நாடார் மஹாஜன சங்கப்பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காமராஜ் யுவ கேந்திரா மாநில தலைவர் திரு. ஐசக் அவர்கள் அமைப்பின் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்து https://kamarajyuvakendra.org/ இணையதளத்தில் உள்ள பயன்பாடுகளை பற்றியும் தெளிவு படுத்தினார். அரசு வேலைகளில் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்வது பற்றி திருமதி. பத்மா அவர்களும், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பற்றி திரு சக்திவேல் ராஜன் அவர்களும் விளக்கினார்கள். அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள். இவ்விழாவினை மிக சிறப்பான முறையில் திரு குகன் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், இளைஞர்கள், தொழில் ஆர்வலர்கள், அரசியல் ஆர்வமுள்ளவர்கள், மற்றும் மகளிர் மன்றங்கள், உறவின்முறை நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். [...]
 • இராமேஸ்வரம் மேன்சன்
 • தொழில் தோழமை மாநாடு

உறவின்முறை

வேலைவாய்ப்பு

 • IBPS

  பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  இதற்கானத் தேர்வுகளுக்கு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 9ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

  ஐபிபிஎஸ் :
  இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சின்டிகேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதிகளும், தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

  வங்கி கிளார்க் வேலை: 
  தற்போது வங்கி தேர்வு வாரியம் சார்பில் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 1,379 இடங்களும், புதுச்சேரியில் 44, கேரளாவில் 349 இடங்களும் என மொத்தமாக நாடு முழுவதும் 12,074 இடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மூலம் வரும் செப்டம்பர் 17 முதுல் அக்டோபர் 9 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  முதல் நிலைத் தேர்வு:
  இத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், முதல்நிலை தேர்வானது (ப்ரிலிமினரிதேர்வு) வரும் டிசம்பர் (2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) 2020, ஜனவரி 19 ஆம் தேதியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மதிப்பெண்கள்: 
  முதன்மைத் தேர்வு வினாத்தாள் மதிப்பெண்கள் குறித்த விபரங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. பொது மற்றும் நிதித் துறையில் 50 மதிப்பெண்களும், பொது ஆங்கிலத்தில் 40 மதிப்பெண்கள், பகுத்தறிவு மற்றும் கணினி திறன் - 60 மதிப்பெண்கள், அளவு திறன் - 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கும், முதல் நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

  விண்ணப்பிக்கும் முறை: 
  விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேகப்படுகின்றன. மேலும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டிற்கும் சேர்த்து ஒரு முறை பதிவு செய்தாலே போதும். அதாவது விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுகளுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை.

  கல்வி மற்றும் வயது வரம்பு: 
  விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினித் திறன் அவசியம். 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

  முக்கியத் தேதிகள்: 
  விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் - 17 செப்டம்பர் 2019
   விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 09 செப்டம்பர் 2019 (மாலை 5) 
  தேர்வு பயிற்சி வழங்கும் காலம் - நவம்பர் 2019 
  ஆன்லைன் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் - நவம்பர் 2019 
  முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் - 7, 8,14 மற்றும் 21 டிசம்பர் 2019 
  முதல்நிலைத் தேர்வு முடிவு - 2019 டிசம்பர் / 2020 ஜனவரி
   முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஆன்லைன் தேர்வு) - ஜனவரி 2020 
  ஐபிபிஎஸ் முதன்மைத் தேர்வு தேதி - 19 ஜனவரி 2020

  விண்ணப்பக் கட்டணம்:
  பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 எஸ்.சி, எஸ்.டி மற்றும் இராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

  முக்கியக் குறிப்புகள்:
  ஐபிபிஎஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பம் - jpeg பைல் 10 kb முதல் 20 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கட்டைவிரல் பதிவு - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை கையால் எழுதப்பட்ட உறுதி வாக்குமூலத்தின் ஸ்கேன் நகல் - jpeg கோப்பில் 50 kb முதல் 100 kb வரை. 

  இதுகுறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-clerical-cadre-ix/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

  [...]
 • டிஎன்பிஎஸ்சி குரூப்-4
 • சிவந்தி அகாடமி

அமைப்புகள்

அரசியல்

பொது செய்திகள்

 • பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன் இல்ல விழா

  அகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன்-சரோஜினி அவர்களது செல்வ மகள் இரா.துவாரகாவின் காதணி விழா இராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.  அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாநில பொதுச்செயலாளர் திரு.பா.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் செ.தாமோதிரன் வரவேற்புரையாற்றினார்,
  மாநில செயலாளர் திரு.கு.நாகராஜன், அமீரக கிளை தலைவர் திரு.அருள்வீர கேசவன், ஓமன் கிளை மூத்த உறுப்பினர் திரு.இராமகிருஷ்ணன், இரட்டையூரணி நாடார் உறவின்முறை தலைவர் திரு.முருகேசன், சென்னைவாழ் இராமநாதபுரம் நாடார் சங்க செயலாளர் திரு.விமலசண்முகவேல், பொருளாளர் திரு.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
  சிறப்பு விருந்தினர்களாக நாடார் மஹாஜன சங்க இணைச்செயலாளர் திரு.த.மோகன்,
  அகில இந்திய சத்ரிய நாடார் சங்க நிறுவனத்தலைவர் இராச.வீரமணி கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் செ.பிரபாகரன், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கு.பத்மநாபன், வே.அசோக், இளங்கோவன், லிங்கநாதன், ஜெயப்பிரகாஷ், கோபிராஜா, உதயமூர்த்தி, திரு சுப்பிரமணியன் மற்றும் திருமதி மணிமேகலை செல்வம், திருமதி.தாரணி மகேந்திரன், திருமதி.கோகிலா தமிழ்க்குமரன், திருமதி.தீபா நந்தபாபு,  திருமதி ஞானசௌந்தரி செம்புக்குட்டி, உள்ளிட்ட அகில இந்திய சத்ரிய நாடார் சங்கம், கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை , உறவின்முறைகள்,மகளிர் மன்றங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாவட்ட பொருளாளர் திரு.ஆனந்தபாபு நன்றியுரையாற்றினார்

  [...]
 • இந்தியா
 • திருமண சீர்வரிசை திட்டம்