நாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா

வசந்தகுமார்

கன்னியாகுமரி எம்பியாக வெற்றிப்பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றிபெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக வசந்தகுமார் அறிவித்திருந்தார். அதன்படி அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குவதா அல்லது காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை நிறுத்துமா என்பது குறித்து இரண்டு கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள் என்றார்.