காமராஜ் யுவகேந்திரா
காமராஜ் யுவகேந்திரா

காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம்!

28.05.2019 இராமநாதபுரம் G.S.மஹாலில் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் காமராஜ் யுவ கேந்திரா விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. சமுதாய இளைஞர்களை சிந்தனையுள்ளவர்களாக உருவாக்கவும்,கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வர்த்தகம், மருத்துவம் மற்றும் அரசியல் துறைகளில் ஆற்றல் மிக்கவர்களாகவும், ஆளுமைத்திறன் உள்ளவர்களாகவும் உருவாக்கபட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட காமராஜ் யுவகேந்திரா வின் அறிமுக விழா நாடார் மஹாஜன சங்கப்பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காமராஜ் யுவ கேந்திரா மாநில தலைவர் திரு. ஐசக் அவர்கள் அமைப்பின் செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்து https://kamarajyuvakendra.org/ இணையதளத்தில் உள்ள பயன்பாடுகளை பற்றியும் தெளிவு படுத்தினார். அரசு வேலைகளில் போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்வது பற்றி திருமதி. பத்மா அவர்களும், வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பற்றி திரு சக்திவேல் ராஜன் அவர்களும் விளக்கினார்கள். அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்கள். இவ்விழாவினை மிக சிறப்பான முறையில் திரு குகன் அவர்கள் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், இளைஞர்கள், தொழில் ஆர்வலர்கள், அரசியல் ஆர்வமுள்ளவர்கள், மற்றும் மகளிர் மன்றங்கள், உறவின்முறை நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். […]

இராமேஸ்வரம் மேன்சன்
இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் மேன்சன் புதிய கட்டிடத் திறப்புவிழா

நாடார் மகாஜன சங்கம் P.A.K.P.தில்லைச்சிவகாமி மஹாஜன மேன்சன் இராமேஸ்வரம், புதிய கட்டிடத் திறப்புவிழா இன்று 01.05.2019 நாள் சிறப்பாக நடைப் பெற்றது. விழாவில் பொது செயலாளர் G.கரிக்கோல் ராஜ் , இணைச்செயலாளர் ஆனந்தகுமார் , மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். […]

தொழில் தோழமை மாநாடு
மஹாஜன சங்கம்

மாநில அளவிலான தொழில் தோழமை மாநாடு

மாநில அளவிலான தொழில் தோழமை மாநாடு மற்றும் கிராமப்புற மற்றும் வேளாண் சார்ந்த நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சி 08,09,10 மார்ச் 2019 ஆகிய மூன்று நாட்கள் மதுரையில் நடைபெறுகின்றது. இதில் முதல் நாளான இன்று 08.03.2019 ஆரம்பிக்கப்பட்டது.இதில் நமது நாடார் மஹாஜன சங்கப் பொதுச்செயலாளர் திரு.G.கரிக்கோல்ராஜ் அவர்கள் கலந்துக்கொண்டார். நமது நாடார் மஹாஜன சங்கம் சார்பாக நாடார் மகளிர் மன்றங்கள், பாண்டியனார் தொழிற்சங்கம் மற்றும் நா.ம.ச.சேர்மத்தாய்வாசன் கல்லூரியிலிருந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். […]