அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில்
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 15 நாட்கள் நடைபெறும்.

நாள்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 8ம் நாள் திருவிழாவாக 9ம் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுதலும், 9ம் நாள் திருவிழாவாக 10ம் தேதி அக்கினிசட்டி மற்றும் பிரார்த்தனை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தினந்தோறும் கோயில் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பொங்கல் விழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் சுதாகர் தலைமையில் உற்சவ கமிட்டியினர் செய்து வருகின்றனர். […]

நிலநடுக்கம்
இந்தியா

அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின.

அந்தமானில் இன்று காலை 6.09 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து தெருக்களுக்கு ஓடிச் சென்றனர்.

நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், சுனாமி ஏற்படும் அச்சம் இருப்பதாக பதற்றம் நிலவியது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

10 கி.மீ தூரத்திற்கு இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 1ம் தேதி ஒரே நாளில் 20 முறை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

India
India

ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு: பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் மதியம் 2 மணி முதல் 5 மணி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை தமிழக மாணவர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் எழுதினர். இந்த ஆண்டு நீட் தேர்வு எளிதாக இருந்ததாகவும் மாணவ […]