புதிய உச்சத்தை தொட்ட பின்னர் பங்குச்சந்தையில் சரிவு

பங்குச்சந்தையில் சரிவு

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் காலையில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், பிற்பகலில் சரிவுடன் நிறைவடைந்தது.

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து கணிப்பு முடிவின் எதிரொலியாக, திங்கட்கிழமை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக காலையிலும் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி, இதுவரை இல்லாத புதிய உச்சமாக 39 ஆயிரத்து 571 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. அதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் லாபம் கருதி வங்கி, ஐடி, ஆட்டோ துறை சார்ந்த பங்குகளை அதிகம் விற்பனை செய்ததால், பிற்பகலில் சென்செக்ஸ் 382 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 969 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதே போன்று நிப்டியும் காலையில் 11 ஆயிரத்து 883 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பின்னர் பிற்பகலில் 119 புள்ளிகள் சரிவடைந்து, 11 ஆயிரத்து 709 புள்ளிகள் நிறைவுற்றது.