• இராமநாதபுரம் மாவட்ட நாடார் உறவின்முறை சங்க கூட்டம்
  • அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா தொடக்கம்..
  • கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை சார்பில் உங்களால் முடியும்-2020
  • நாங்குநேரி MLA பதவியிலிருந்து வசந்தகுமார் ராஜினாமா
  • அகில இந்திய சத்ரிய நாடார் சங்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு ராஜேஸ்வரன் இல்ல விழா
  • பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

சங்கம்

  • சங்கம்

    இராமநாதபுரம் மாவட்ட நாடார் உறவின்முறை சங்க கூட்டம் பதநீர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் சேது பாலசிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கராஜ், பொருளாளர் தனசேகரன் முன்னிலை வகித்தனர்.  இதில் திருச்செந்தூரில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணி மண்டபம் திறப்பு விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஏராளமான வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என்றும், நலிவடைந்து வரும் பனை தொழிலாளர்களின் குடும்பங்களை மேம்படுத்தும் பொருட்டு, அதனை நம்பி வாழும் பல லட்சம் தொழிலாளர்களின்  வாழ்க்கை தரம் பெருகிட, தகுந்த திட்டங்களை செயல்படுத்த முதல் அமைச்சரிடம் கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

    [...]
  • காமராஜ் யுவகேந்திரா
  • இராமேஸ்வரம் மேன்சன்

உறவின்முறை

வேலைவாய்ப்பு

  • IBPS

    பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கானத் தேர்வுகளுக்கு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 9ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

    ஐபிபிஎஸ் :
    இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சின்டிகேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதிகளும், தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    வங்கி கிளார்க் வேலை: 
    தற்போது வங்கி தேர்வு வாரியம் சார்பில் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 1,379 இடங்களும், புதுச்சேரியில் 44, கேரளாவில் 349 இடங்களும் என மொத்தமாக நாடு முழுவதும் 12,074 இடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மூலம் வரும் செப்டம்பர் 17 முதுல் அக்டோபர் 9 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    முதல் நிலைத் தேர்வு:
    இத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், முதல்நிலை தேர்வானது (ப்ரிலிமினரிதேர்வு) வரும் டிசம்பர் (2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) 2020, ஜனவரி 19 ஆம் தேதியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதிப்பெண்கள்: 
    முதன்மைத் தேர்வு வினாத்தாள் மதிப்பெண்கள் குறித்த விபரங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. பொது மற்றும் நிதித் துறையில் 50 மதிப்பெண்களும், பொது ஆங்கிலத்தில் 40 மதிப்பெண்கள், பகுத்தறிவு மற்றும் கணினி திறன் - 60 மதிப்பெண்கள், அளவு திறன் - 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கும், முதல் நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

    விண்ணப்பிக்கும் முறை: 
    விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேகப்படுகின்றன. மேலும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டிற்கும் சேர்த்து ஒரு முறை பதிவு செய்தாலே போதும். அதாவது விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுகளுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை.

    கல்வி மற்றும் வயது வரம்பு: 
    விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினித் திறன் அவசியம். 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

    முக்கியத் தேதிகள்: 
    விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் - 17 செப்டம்பர் 2019
     விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 09 செப்டம்பர் 2019 (மாலை 5) 
    தேர்வு பயிற்சி வழங்கும் காலம் - நவம்பர் 2019 
    ஆன்லைன் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் - நவம்பர் 2019 
    முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் - 7, 8,14 மற்றும் 21 டிசம்பர் 2019 
    முதல்நிலைத் தேர்வு முடிவு - 2019 டிசம்பர் / 2020 ஜனவரி
     முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஆன்லைன் தேர்வு) - ஜனவரி 2020 
    ஐபிபிஎஸ் முதன்மைத் தேர்வு தேதி - 19 ஜனவரி 2020

    விண்ணப்பக் கட்டணம்:
    பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 எஸ்.சி, எஸ்.டி மற்றும் இராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

    முக்கியக் குறிப்புகள்:
    ஐபிபிஎஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பம் - jpeg பைல் 10 kb முதல் 20 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கட்டைவிரல் பதிவு - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை கையால் எழுதப்பட்ட உறுதி வாக்குமூலத்தின் ஸ்கேன் நகல் - jpeg கோப்பில் 50 kb முதல் 100 kb வரை. 

    இதுகுறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-clerical-cadre-ix/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

    [...]
  • டிஎன்பிஎஸ்சி குரூப்-4
  • சிவந்தி அகாடமி

அமைப்புகள்

  • கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை

    கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை சார்பாக, 10, 11, 12 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வினை  கையாளும் விதம் பற்றிய வழிகாட்டும் நிகழ்ச்சி  "உங்களால் முடியும்-2020"  16-02-2020 அன்று கும்பரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  சிறப்பாக நடைபெற்றது.  

    கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை  நிர்வாக குழு உறுப்பினர் க.கிருஷ்ணன் தலைமை தாங்க, கும்பரம் உறவின்முறை தலைவர் ஆர்.முருகேசன் மற்றும் கும்பரம் ஊராட்சி மன்ற தலைவர் துளசி தேவி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை முறையாக ஒருங்கிணைத்து,  கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் திருமதி தாரணி மகேந்திரன்  தொகுத்து வழங்கினார். கடுக்காய் வலசை, இரெட்டையூரணி, மேதலோடை, கும்பரம், தாமரைக்குளம், தேவிபட்டினம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர். கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர் க.தங்கராஜ் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவுற்றது. 

    நிகழ்ச்சியில் கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,  கும்பரம் உறவின்முறை கிராம பொது மக்கள்,  அகில இந்திய சத்ரிய நாடார் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  சிலம்பாட்டம், ஒயிலாட்டம்  போன்ற பாரம்பரிய கலை வளர முயற்சி எடுத்து வரும் கும்பரம் வரதராஜன் உட்பட சமூக அக்கறையுள்ளவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

    கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நேசம் அறக்கட்டளை சார்பாக  இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
     

    [...]
  • பெருந்தலைவர்  பிறந்தநாள்
  • மன்னர் தவசி நாடார்  குரு பூஜை

அரசியல்

பொது செய்திகள்

  • பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன் இல்ல விழா

    அகில இந்திய சத்ரிய நாடார் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் பாண்டியநாடு சு.சீ. இராஜேஸ்வரன்-சரோஜினி அவர்களது செல்வ மகள் இரா.துவாரகாவின் காதணி விழா இராமநாதபுரம் மாவட்டம் தாமரைக்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.  அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாநில பொதுச்செயலாளர் திரு.பா.காந்திராஜன் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் செ.தாமோதிரன் வரவேற்புரையாற்றினார்,
    மாநில செயலாளர் திரு.கு.நாகராஜன், அமீரக கிளை தலைவர் திரு.அருள்வீர கேசவன், ஓமன் கிளை மூத்த உறுப்பினர் திரு.இராமகிருஷ்ணன், இரட்டையூரணி நாடார் உறவின்முறை தலைவர் திரு.முருகேசன், சென்னைவாழ் இராமநாதபுரம் நாடார் சங்க செயலாளர் திரு.விமலசண்முகவேல், பொருளாளர் திரு.காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
    சிறப்பு விருந்தினர்களாக நாடார் மஹாஜன சங்க இணைச்செயலாளர் திரு.த.மோகன்,
    அகில இந்திய சத்ரிய நாடார் சங்க நிறுவனத்தலைவர் இராச.வீரமணி கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் செ.பிரபாகரன், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் கு.பத்மநாபன், வே.அசோக், இளங்கோவன், லிங்கநாதன், ஜெயப்பிரகாஷ், கோபிராஜா, உதயமூர்த்தி, திரு சுப்பிரமணியன் மற்றும் திருமதி மணிமேகலை செல்வம், திருமதி.தாரணி மகேந்திரன், திருமதி.கோகிலா தமிழ்க்குமரன், திருமதி.தீபா நந்தபாபு,  திருமதி ஞானசௌந்தரி செம்புக்குட்டி, உள்ளிட்ட அகில இந்திய சத்ரிய நாடார் சங்கம், கல்வித்தந்தை காமராஜ் அறக்கட்டளை , உறவின்முறைகள்,மகளிர் மன்றங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக அகில இந்திய சத்ரிய நாடார் சங்க மாவட்ட பொருளாளர் திரு.ஆனந்தபாபு நன்றியுரையாற்றினார்

    [...]
  • இந்தியா
  • திருமண சீர்வரிசை திட்டம்